மின்சாரம் தாக்கி ஓய்வுபெற்ற ஊழியர் பலி: மின்வாரிய உதவி என்ஜினீயர் உள்பட 4 பேர் மீது வழக்கு

மின்சாரம் தாக்கி ஓய்வுபெற்ற ஊழியர் பலியான சம்பவத்தில் மின்வாரிய உதவி என்ஜினீயர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2022-06-23 01:49 GMT

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை சோலையப்பன் தெருவைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 62). மின் வாரியத்தில் வேலை செய்து ஓய்வு பெற்றவர். நேற்று முன்தினம் கெல்லீஸ் மின்வாரிய அலுவலகத்தில் இருந்து இவரை உதவிக்கு அழைத்ததாக கூறப்படுகிறது. அப்போது பணியின்போது மின்சாரம் தாக்கி ராதாகிருஷ்ணன் பலியானார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவருடைய மகன் ராஜேஷ்குமார், ஓய்வுபெற்ற தனது தந்தையை அழைத்து அலட்சியமான முறையில் ஆபத்தான பணியை செய்ய நிர்பந்தித்த மின்வாரிய அதிகாரி மற்றும் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தலைமைச் செயலக காலனி போலீசில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் மின்வாரிய உதவி என்ஜினீயர் ராஜேஷ் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்