வசந்தகுமார் உருவப்படத்துக்கு மரியாதை

வர்த்தகர் காங்கிரஸ் சார்பில் வசந்தகுமார் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

Update: 2023-08-29 00:00 GMT

தேனி மாவட்ட வர்த்தகர் காங்கிரஸ் சார்பில் முன்னாள் எம்.பி. எச்.வசந்தகுமார் நினைவு நாளையொட்டி நினைவு அஞ்சலி கூட்டம், தேனி காமராஜர் பவனில் நடந்தது. இதற்கு வர்த்தகர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் சங்கரநாராயணன் தலைமை தாங்கி, வசந்தகுமார் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் ஏழை-எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில், மாநில வர்த்தகர் காங்கிரஸ் செயலாளர் மனோகரன், மாவட்ட செயலாளர்கள் மெல்வின், தர்மர் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். பின்னர், தேனி வசந்த் அன்கோ கிளையில் வைக்கப்பட்டு இருந்த வசந்தகுமார் உருவப்படத்துக்கு மாவட்ட தலைவர் சங்கரநாராயணன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்