நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம்; நடக்காத விஷயத்தை திரும்பத் திரும்ப சொல்கிறார்கள் - நயினார் நாகேந்திரன்

நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் போடுவது நடக்காத விஷயத்தை திரும்பத் திரும்ப சொல்வது போல் இருக்கிறது என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Update: 2024-06-28 15:49 GMT

சென்னை,

தமிழக சட்டப்பேரவையில், நீட் தேர்வுக்கு எதிராக முதல்-அமைச்சர் கொண்டு வந்த தனித்தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பா.ஜ.க சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியதாவது;-

"நீட் தேர்வுக்கு எதிராக ஏற்கனவே தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் திருப்பி அனுப்பப்பட்ட நிலையில், 2-வது முறையாக தீர்மானம் போடுவது, நடக்காத விஷயத்தை திரும்பத் திரும்ப சொல்வது போல் உள்ளது. நீட் தேர்வு விவகாரத்தில் அரசியல் செய்கிறார்கள். இதை ஏற்க இயலாது.

ஏழை எளிய மாணவர்கள் மருத்துவ படிப்பு படிப்பதற்கு வசதியாக நீட் தேர்வு இருக்கிறது. எனவே நீட் தேர்வு வேண்டும். தமிழ்நாட்டில் பிளஸ் 2 தேர்வில் சில இடங்களில் வினாத்தாள் கசிந்த சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அதற்காக பிளஸ் 2 தேர்வை ரத்து செய்துவிட்டார்களா?"

இவ்வாறு நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.


Full View


Tags:    

மேலும் செய்திகள்