புகழூர் நகராட்சி பகுதியில் தொடர் மின் தடையால் பொதுமக்கள் அவதி

புகழூர் நகராட்சி பகுதியில் தொடர் மின் தடையால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

Update: 2023-05-04 18:26 GMT

புகழூர் துணை மின் நிலையத்தில் இருந்து வினியோகிக்கப்படும் மின்சாரம் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு நேற்று காலை முதல் மாலை வரை ஒரு மணி நேரம் மட்டும் கொடுக்கப்பட்டிருந்தது. அதேபோல் மாலை 6 மணி முதல் தொடர்ந்து மின் வினியோகம் செய்யப்படாததால் நகராட்சி பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்பட்டது. இதனால் கடைக்காரர்கள், பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதுகுறித்து மின்வாரிய அதிகாரியிடம் கேட்டபோது, உயர் மின்னழுத்த வேலைகள் நடைபெற்று வருவதால் பகல் நேரங்களில் மின் நிறுத்தும் ஏற்பட்டது. தற்போது புகழூர் வாய்க்கால் அருகே மின்கம்பி மீது தென்னை மரம் விழுந்து விட்டதால் மின் கம்பம் உடைந்து சேதம் ஆகிவிட்டது. அதன் காரணமாக மின் நிறுத்தம் ஏற்பட்டு விட்டது. தொடர்ந்து தென்னை மரங்களை வெட்டி எடுக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து மழை பெய்வதால் பணி தாமதப்படுவதாகவும், விரைவில் சீரமைக்கப்பட்டு மின்வினியோகம் கொடுக்கப்படும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்