நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டர்கள்-தூய்மை பணியாளர்கள் போராட்டம்

நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டர்கள்-தூய்மை பணியாளர்கள் போராட்டத்தி்ல் ஈடுபட்டனர்.

Update: 2023-08-10 18:39 GMT

கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பு தமிழ்நாடு ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டர்கள், தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள் இணைந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் மாவட்ட கலெக்டரின் 2018-ம் ஆண்டின் உத்தரவுப்படி இயக்குனர்கள், தூய்மை பணியாளர்களுக்கு 7-வது ஊதியக்குழு நிலுவைத்தொகையை உடனே வழங்க வேண்டும். மூன்றாண்டு பணி முடித்த தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு கால முறை ஊதியம் வழங்க வேண்டும். கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை காவலர்களுக்கு ஊராட்சி மூலம் நேரடி ஊதியம் வழங்க வேண்டும். 30 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் ஆபரேட்டர்களை பணி நிரந்தரம் செய்து பணிக்கொடை ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதையடுத்து அவர்களிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் பால் பிரான்சிஸ் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில், உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்