கல்வியில் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்
கல்வியில் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என முன்னாள் எல்லை பாதுகாப்புப் படைவீரர்கள் நல சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
முன்னாள் எல்லை பாதுகாப்புப் படைவீரர்கள் நல சங்க மாநில பொதுக்குழு கூட்டம் காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள முன்னாள் எல்லை பாதுகாப்புப் படை கேண்டீனில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் எஸ்.கே.சீனிவாசன் தலைமை தாங்கி பேசினார். மாநில பொதுச்செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலூர் மாவட்ட தலைவர் கண்ணதாசன் வரவேற்றார்..
கூட்டத்தில் முன்னாள் எல்லை பாதுகாப்புப் படை வீரர்களுக்கு, ராணுவ வீரர்களுக்கு அளிக்கப்படும் அந்தஸ்து வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற பிறகு மறு வேலை வாய்ப்பு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். டி.என்.பி.எஸ்.சி. பொதுத்தேர்வில் முன்னுரிமை அளிக்க வேண்டும். முன்னாள் எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு அரசு இடத்தில் கேண்டீன் செயல்படுத்த வேண்டும். கல்வியில் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் மாவட்ட பொருளாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.