நெல்லை கல்குவாரி விபத்தில் 8-வது நாளாக தொடரும் மீட்பு பணி

நெல்லை கல்குவாரி விபத்தில் 8-வது நாளாக மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Update: 2022-05-22 04:54 GMT

நெல்லை,

நெல்லை அருகே அடைமிதிப்பான்குளம் பகுதியில் உள்ள கல் குவாரியில் கடந்த 14-ந் தேதி பாறைகள் சரிந்து விழுந்த விபத்தில் 6 பேர் சிக்கினர். இதில் முருகன், விஜய் ஆகியோர் உயிருடன் மீட்கப்பட்டு, பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

செல்வம், மற்றொரு முருகன், செல்வகுமார் ஆகியோர் உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன.

இந்த நிலையில், கல்குவாரி விபத்தில் பாறை இடுபாடுகளில் சிக்கிய 6-வது நபரான ராஜேந்திரனை தேடும் பணியில் மீட்பு குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இன்று 8-வது நாளாக தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருகிறது. பாறைகளுக்கு வெடி வைத்து தகர்த்து, அவரை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்