காயத்துடன் சுற்றி திரிந்த புள்ளிமான் மீட்பு
தென்காசியில் காயத்துடன் சுற்றி திரிந்த புள்ளிமான் மீட்கப்பட்டது.
தென்காசி கீழப்புலியூர் ரெயில் நிலையம் அருகில் உள்ள தனியார் நிறுவன வளாகத்தில் நேற்று காயங்களுடன் புள்ளிமான் சுற்றி திரிந்தது. இதுகுறித்து தென்காசி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனே தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று, அந்த புள்ளிமானை பத்திரமாக பிடித்து, முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அதனை ஆய்க்குடி வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.