கிணற்றில் விழுந்த மயில் மீட்பு
பனவடலிசத்திரம் அருகே கிணற்றில் விழுந்த மயில் பத்திரமாக மீட்கப்பட்டது.
பனவடலிசத்திரம்:
மேலநீலிதநல்லூர் ஒன்றியம் பனவடலிசத்திரம் அருகே உள்ள குருக்கள்பட்டி ராஜீவ் காலனியை சேர்ந்தவர் ராமகிருஷ்ண மூப்பனார். இவருக்கு சொந்தமாக அப்பகுதியில் உள்ள கிணற்றில் நேற்று மயில் ஒன்று விழுந்து தத்தளித்துக் கொண்டிருந்தது. இதுகுறித்து சங்கரன்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தீயணைப்பு படையினர் விரைந்து வந்து, கிணற்றில் விழுந்த மயிலை பத்திரமாக மீட்டு காட்டுப்பகுதியில் கொண்டு விட்டனர்.