கிணற்றில் விழுந்த மயில் மீட்பு

சாத்தான்குளம் அருகே கிணற்றில் விழுந்த மயில் பத்திரமாக மீட்கப்பட்டது.;

Update:2022-07-10 19:05 IST

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் அருகே கடாட்சபுரம் முத்துகிருஷ்ணாபுரத்தில் தன்ராஜ் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் 80 அடி ஆழத்தில் கிணறு உள்ளது. இந்த கிணற்றில் தற்போது 20 அடிக்கு தண்ணீர் இருக்கிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் தோட்டத்துக்கு வந்த மயில் ஒன்று, கிணற்றில் தவறி விழுந்து தத்தளித்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலையஅலுவலர் மாரியப்பன் தலைமையில் நிலைய சிறப்பு அலுவலர் ஹாரீஸ்தாமஸ் மற்றும் வீரர்கள் விரைந்து சென்று கிணற்றில் இறங்கி மயிலை மீட்டனர். பின்னர் மயில், வனப்பகுதியில் பத்திரமாக விடப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்