குளத்தில் தவறி விழுந்த மான் மீட்பு
கர்நாடக அரசு பூங்கா குளத்தில் தவறி விழுந்த மான் மீட்கப்பட்டது.
ஊட்டி
ஊட்டி பெர்ன்ஹில் பகுதியில் கர்நாடக அரசின் தோட்டக்கலைத்துறை பூங்கா உள்ளது. இங்கு மலர் அருவி, கண்ணாடி மாளிகை, தொங்கு பாலம் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. தற்போது கோடை சீசன் என்பதால், சுற்றுலா பயணிகள் அதிகமாக வந்து செல்கின்றனர். இந்தநிலையில் பூங்காவில் 8 அடி ஆழம் கொண்ட மீன்கள் வளர்க்கப்படும் குளத்தில் கடமான் தவறி விழுந்தது. பின்னர் கடமான் வெளியே வர முடியாமல் நீண்ட நேரமாக தண்ணீரில் தத்தளித்தது. இதுகுறித்து தகவல் அறிந்த ஊட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் பிரேமானந்தன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கயிற்றால் ஆன வலை மூலம் மானை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் வனத்துறையினர் அந்த மானை வனப்பகுதியில் விட்டனர்.