ஆந்திராவில் இருந்து கேரள மாநிலத்திற்கு இறைச்சிக்காக கொண்டு செல்லப்பட்ட 30 மாடுகள் மீட்பு

ஆந்திராவில் இருந்து கேரள மாநிலத்திற்கு இறைச்சிக்காக கொண்டு செல்லப்பட்ட 30 மாடுகளை வெள்ளியணை போலீசார் மீட்டு கோசாலைக்கு அனுப்பி வைத்தனர்.;

Update:2023-04-04 00:00 IST

லாரியில் வந்த மாடுகள்

ஆந்திர மாநிலம், சிலுக்கல்லூர் பேட்டை மாவட்டத்தில் இருந்து 30 எருமை மாடுகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் பொள்ளாச்சி நோக்கி நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை கரூர் மாவட்டம், புலியூர் அருகே உள்ள குளத்துப்பாளையம் பகுதியில் தமிழக இந்து மக்கள் முன்னணியின் மாநில நிறுவன தலைவர் தமிழ்செல்வன் தடுத்து நிறுத்தி, வெள்ளியணை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர்.

கோசாலைக்கு அனுப்பிவைப்பு

விசாரணையில், மாடுகளை பொள்ளாச்சி சந்தைக்கு கொண்டு சென்று அங்கிருந்து கேரளாவுக்கு இறைச்சிக்காக விற்பனை செய்ய இருந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து லாரியுடன் அந்த மாடுகளை போலீசார் மீட்டு, ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியில் உள்ள கோசாலைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தமிழ்செல்வன் கொடுத்த புகாரின் பேரில் வெள்ளியணை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்