வந்தேபாரத் ரெயில் நின்று செல்ல மத்திய மந்திரியிடம் கோரிக்கை

வந்தேபாரத் ரெயில் ஜோலார்பேட்டையில் நின்று செல்ல மத்திய மந்திரியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சி.என்.அண்ணாதுரை எம்.பி. தெரிவித்தார்.

Update: 2023-06-29 13:10 GMT

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

'சதாப்தி' நின்று செல்ல ஏற்பாடு

டாக்டர் எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்திலிருந்து பெங்களூரு வரை செல்லும் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் ஜோலார்பேட்டையில் நிற்காமல் சென்றது. இது குறித்து பாராளுமன்றத்தில் இரண்டு முறை சதாப்தி எக்ஸ்பிரஸ் ஜோலார்பேட்டையில் நின்று செல்ல வேண்டும் என பேசினேன்.

அதனைத் தொடர்ந்து ெரயில்வே மந்திரியை சந்தித்து கடிதம் அளித்தேன். அதன் தொடர்ச்சியாக வருகிற 9-ம் தேதி முதல் சென்னையில் மாலை 5.30 மணிக்கும், 10-ந் தேதி பெங்களூருவில் காலை 6 மணிக்கும் புறப்படும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் ஜோலார்பேட்டையில் நின்று செல்ல உள்ளது.

வந்தேபாரத் ரெயில்

மேலும் வந்தே பாரத் ெரயில் ஜோலார்பேட்டையில் நின்று செல்லவும் மத்திய மந்திரியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விரைவில் வந்தே பாரத் ெரயில் ஜோலார்பேட்டையில் நின்று செல்லும். மேலும் திருப்பத்தூர் ெரயில் நிலையத்திலும் பல ெரயில்கள் நின்று செல்ல ெரயில்வே மந்திரியிடம் கடிதம் கொடுத்துள்ளேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்

சதாப்தி எக்ஸ்பிரஸ் ெரயில் ஜோலார்பேட்டையில் நின்று செல்வதையொட்டி திருப்பத்தூரில் வியாபாரிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் சி.என்.அண்ணாதுரை எம்.பி.யை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்