கரூரில் இருந்து சென்னைக்கு பகலில் ரெயில் சேவை தொடங்க கோரிக்கை
கரூரில் இருந்து சென்னைக்கு பகலில் ரெயில் சேவை தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூரில் உள்ள அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தின் 8-வது கோட்ட மாநாடு நடைபெற்றது. இதற்கு கோட்ட தலைவர் சவுந்தரலிங்கம் தலைமை தாங்கினார். கோட்ட துணைத்தலைவர் செல்வராஜ், பாலசுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் அன்பழகன் சிறப்புரையாற்றினார். மாநாட்டில் சாலை பணியாளர்களின் 49 மாத பணி நீக்க காலத்தை பணிக்கலமாக அறிவித்து அரசாணை வழங்க வேண்டும்,
கரூரில் இருந்து சென்னைக்கு பகலில் ெரயில் சேவை தொடங்க வேண்டும், கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து அதிகமாக உள்ளதால் 4 வழிச்சாலையாக மாற்ற வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் சங்க நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட இணைச்செயலாளர் சிவக்குமார் நன்றி கூறினார்.