தாயில்பட்டி,
சாத்தூர் தாலுகா படந்தால் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிக்கு செல்வதற்கு போதிய சாலை வசதி இல்லாததால் கழிவு நீர் செல்ல வழியின்றி சாலையில் தேங்கி நிற்கிறது. கழிவு நீர் தேங்கி அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இந்த சாலையில் 2 அங்கன்வாடி மையங்கள் மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த வழியாக பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகள் கழிவுநீரை கடந்து தான் செல்கின்றனர். இதனால் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் அப்பகுதி மக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. ஆகையால் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள், நலன் கருதி இப்பகுதியில் சாலை வசதி செய்துதர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.