சேறும், சகதியுமாக உள்ள சாலையை சீரமைக்க கோரிக்கை
சேறும், சகதியுமாக உள்ள சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பாலையூரில் சின்னாங்குட்டை என்னும் பகுதி உள்ளது. இந்த பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்தநிலையில் சின்னாங்குட்டை- எசனை பிரிவு சாலை குண்டும், குழியுமாக மோசமான நிலையில் உள்ளது. மழைக் காலங்களில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக பொதுமக்கள் நடமாட முடியாத நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குடியிருப்பு பகுதியில் சேதமடைந்துள்ள சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.