அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை
அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை விடுத்துள்ளனர்.
தாயில்பட்டி,
வெம்பக்கோட்டையில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் கடந்த 2015-ம் ஆண்டு 50 வீடுகள் கட்டப்பட்டன. தற்போது இங்கு பெரும்பாலான வீடுகளில் விரிசல் விழுந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. அதேபோல வீட்டின் கீழ்தளமும் மிகவும் சேதமடைந்துள்ளது. மழை காலங்களில் வீடுகளுக்குள் மழை நீர் வருவதால் குடியிருப்பவர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் 50 வீடுகளுக்கு போதுமான கழிப்பறை வசதி இல்லாததால் அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர். ஆதலால் வீடுகளை சீரமைப்பதுடன், கழிவறை வசதி, தெருவிளக்கு, குடிநீர், வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்டை வசதிகளையும் செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.