தமிழகத்தில் மேலும் 6 மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசிடம் கோரிக்கை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தமிழகத்தில் தான் அதிக மருத்துவ கல்லூரிகள் உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.;

Update:2023-07-19 21:13 IST
தமிழகத்தில் மேலும் 6 மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசிடம் கோரிக்கை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கி கவுரவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய மா.சுப்பிரமணியன், இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக மருத்துவக் கல்லூரிகள் உள்ளதாகத் தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் 6 மருத்துவக் கல்லூரிகள், 11 செவிலியர் கல்லூரிகள் தொடங்குவதற்கு மத்திய அரசிடம் தமிழக அரசு அனுமதி கோரியுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Full View

 

Tags:    

மேலும் செய்திகள்