தூத்துக்குடி மேலூர் ரெயில் நிலையத்தில் மைசூர், முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இருமார்க்கத்திலும் நின்று செல்ல கோரிக்கை

தூத்துக்குடி மேலூர் ரெயில் நிலையத்தில் மைசூர், முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இருமார்க்கத்திலும் நின்று செல்ல வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-05-27 18:45 GMT

மதுரை-தூத்துக்குடி இடையேயான இரட்டை அகல ரெயில் பாதை பணி மற்றும் தூத்துக்குடி மேலூர் ரெயில் நிலையம் புதிய பஸ்நிலையத்துக்கு எதிரே இடம் மாற்றம் ஆகிய காரணங்களுக்காக கடந்த சில மாதங்களாக மேலூர் ெரயில் நிலையம் செயல்படவில்லை. இந்நிலையில், இந்த பணிகள் தற்போது நிறைவடைந்து உள்ளது. இதனை தொடர்ந்து நேற்று முதல் தூத்துக்குடி மேலூர் ெரயில் நிலையம் செயல்படத் தொடங்கியது. தூத்துக்குடி முத்துநகர் எக்ஸ்பிரஸ் மற்றும் 6 பயணிகள் ெரயில்கள் இங்கு நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதன்மூலம் வெளியூர் செல்லும் பயணிகள் ெரயிலில் இருந்து இறங்கி எளிதில் பஸ்சில் செல்வதற்கு வசதியாக உள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.

பழைய மேலூர் ெரயில் நிலையம் மாற்றப்படுவதற்கு முன்பு வரை தூத்துக்குடி-மைசூரூ எக்ஸ்பிரஸ் இரு மார்க்கங்களிலும் நின்று சென்றது. ஆனால் தற்போது தூத்துக்குடி-மைசூரூ எக்ஸ்பிரஸ் நிற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயிலும் சென்னை செல்லும்போது நிற்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மைசூர் எக்ஸ்பிரஸ், முத்துநகர் எக்ஸ்பிரஸ் ஆகியவை இரு மார்க்கத்திலும் நின்று செல்ல வேண்டும் என ரெயில் பயணிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்