பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த கோரிக்கை

பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.;

Update:2023-07-15 23:10 IST

கரூரில் நேற்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாவட்ட பேரவை கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் கருணாகரன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர்கள் ராஜசேகர், சாமிகுணம், விஜயகுமார், மாநில துணைத்தலைவர் மகாவிஷ்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் தி.மு.க. தேர்தல் வாக்குறுதிப்படி அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில் அரசு துறைகளில் காலியாக உள்ள 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நியமனம் செய்யப்பட வேண்டும். ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர், தூய்மை காவலர், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மாநில பொதுச்செயலாளர் லட்சுமி நாராயணன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்