தமிழ்நாடு ரெயில் பயணிகள் நல வாரியம் அமைக்க வேண்டும்

தமிழ்நாடு ரெயில் பயணிகள் நல வாரியம் அமைக்க வேண்டும் என முதல்-அமைச்சருக்கு தொழில் வணிக கழகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-06-12 18:45 GMT

காரைக்குடி தொழில் வணிக கழக தலைவர் சாமிதிராவிடமணி, செயலாளர் கண்ணப்பன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- இந்திய ரெயில்வே துறையும், மாநில அரசும் இணைந்து வளர்ச்சி திட்டங்களும், ரெயில் பயணிகளின் அவசியமான தேவை மற்றும் வசதிகளை அவ்வப்போது மத்திய அரசிற்கு எடுத்து செல்ல வேண்டும். மேலும் தமிழகத்தில் இதுவரை தாமதமான ரெயில்வே திட்டங்கள், புதிய ரெயில் பாதைக்கு தேவையான நிலங்கள் குறித்து உத்தரவு மூலமாகவே மக்களுக்கு ரெயில் பயண வசதிகளை தருவதற்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும் என்பதால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு ரெயில் பயணிகள் நலவாரியம் என்ற புதிய குழு அமைப்பை ஏற்படுத்த வேண்டும். இந்த குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நகர்மன்ற தலைவர்கள், வணிக சங்கம், ரெயில் பணிகள் நலச்சங்கம், மாநில, மாவட்ட அரசு உயர் அலுவலர்கள், பொதுநல ஆர்வலர்கள் அடங்கிய குழு உறுப்பினர்கள் கொண்டு செயல்படுத்த வேண்டும். இதன் மூலம் அந்தந்த மாநிலங்களில் உள்ள ரெயில்வே துறை நல்ல வளர்ச்சி ஏற்பட்டு ஒழுங்கு படுத்தவும் நல்ல வாய்ப்பு அமையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்