மானாமதுரை-பரமக்குடி வழித்தடங்களில் கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை

மானாமதுரை-பரமக்குடி வழித்தடங்களில் கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

Update: 2023-02-13 18:45 GMT

இளையான்குடி,

மானாமதுரையில் இருந்து பரமக்குடிக்கு செல்லும் அரசு பஸ் காலை 8 மணிக்கு வருவதால் பள்ளி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்வோர், விவசாயிகள் பயன் அடைகிறார்கள். தெ.புதுக்கோட்டை, பிரமணக்குறிச்சி, கச்சாத்த நல்லூர் ஆகிய கிராமங்களில் அதிக பயணிகள் ஏறுவதால் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பள்ளி மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கி கொண்டு பயணம் செய்கிறார்கள். சில நேரங்களில் நிறுத்தத்தில் நிற்காமல் பஸ் சென்று விடுகின்றது. எனவே மானாமதுரை-பரமக்குடி வழித்தடத்தில் காலை, மாலை நேரங்களில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்