ஊர் பெயர் பலகை வைக்கப்படுமா?
ஊர் பெயர் பலகை வைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
எஸ்.புதூர்,
மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை மையப்பகுதியில் அமைந்துள்ளது எஸ்.புதூர் ஒன்றியம் புழுதிபட்டி. இது பொன்னமராவதி பகுதிக்கு செல்ல வசதியாக உள்ளதால் இந்த வழியே செல்லும் வாகனங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஆனால் இங்கு ஊர் பெயர் பலகை இல்லை. இதன் காரணமாக இவ்வழியாக வெளியூர் பகுதியில் இருந்து வருபவர்களுக்கு இந்த ஊரின் பெயர் தெரியவில்லை. பெயர் பலகை இல்லாததால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகளின் நலன்கருதி மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் புழுதிபட்டியில் பெயர் பலகை வைக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.