குடியரசு தினவிழா

நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடியரசு தினவிழா நடைபெற்றது.

Update: 2023-01-27 18:35 GMT

நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடியரசு தினவிழா நடந்தது. ஒன்றியக்குழு தலைவர் பெ.வடிவேலு தலைமை தாங்கி தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். பின்னர் அலுவலக வளாகத்திலுள்ள மகாத்மா காந்தியின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்தார்.

பின்னர் நெமிலி அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் கலந்துகொண்டு தேசியக் கொடி ஏற்றிவைத்து பேசினார். அப்போது மாணவர்கள் நாட்டுப் பற்றுடன் தேசநலனில் அக்கறை கொண்டிருக்க வேண்டும். தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநில வளர்ச்சிக்காக பல நல்ததிட்டங்களை செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக பெண்கள் கல்வியில் உயர புதுமைப்பெண், மகளிருக்கு இலவச பயணதிட்டம் முக்கியமானதாகும் என்றார்.

நிகழ்ச்சிகளில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வேதமுத்து, சிவராமன் மற்றும் அலுவலர்கள், ஊழியர்கள், நெமிலி பேரூராட்சி மன்றத் தலைவர் ரேணுகாதேவி சரவணன், துணைத் தலைவர் சந்திரசேகர், பெற்றோர், ஆசிரியர் கழகத் தலைவர் சேகர், செல்வம், தலைமை ஆசிரியர் சரளாதேவி உள்ளிட்ட ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்