தமிழகத்தில் ரூ.331 கோடியில் 745 கோவில்களில் திருப்பணிகள் - அமைச்சர் சேகர்பாபு தகவல்

மானசரோவர் ஆன்மீகப் பயணம் செல்லும் பக்தர்களுக்கு வழங்கப்படும் மானியம் ரூ.50,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

Update: 2023-04-19 15:05 GMT

சென்னை,

தமிழகத்தில் 745 கோவில்களில் ரூ.331 கோடியில் திருப்பணிகள் நடைபெறும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இது குறித்து சட்டசபையில் பேசிய அவர், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள், பச்சிளம் குழந்தைகளுடன் வரும் பக்தர்கள் விரைவு தரிசனம் செய்ய தனி வரிசை ஏற்படுத்தப்படும் என தெரிவித்தார்.

திருச்சி ஜம்புகேசுவரர் கோவில், அகிலாண்டேஸ்வரி கோவில் மற்றும் மதுரை மீனாட்சி கோவில்களில் மகாசிவராத்திரி பெருவிழா கொண்டாடப்படும் எனவும் அமைச்சர் சேகர்பாபு கூறினார். மானசரோவர் புனித தளத்திற்கு முதன் முறையாக ஆன்மீகப் பயணம் செல்லும் 500 பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மானியம் ரூ.40,000-ல் இருந்து ரூ.50,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதே முக்திநாத் புனித தளத்திற்கு முதன் முறையாக ஆன்மீகப் பயணம் செல்லும் 500 பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அரசு மானியம் ரூ.10,000-ல் இருந்து ரூ.25,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் சேகர்பாபு அறிவித்தார். மேலும் நீலகிரி மாவட்டம் தேவாலா பகுதி 3 கோடி ரூபாயில் சுற்றுலா தளமாக மேம்படுத்தப்படும் எனவும், தமிழ்நாட்டின் முக்கிய கோவில்களில் இந்து சமய அறநிலையத்துறையுடன் இணைந்து வழிகாட்டி சுற்றுலாக்கள் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

திருச்செந்தூர் முருகன் கோவிலில் மாற்றுத்திறனாளிகள் மாற்றுத்திறனாளிகள் கடலில் தீர்த்தமாட 50 லட்சம் ரூபாயில் சிறப்பு நடைபாதை அமைக்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.


Full View

 

Tags:    

மேலும் செய்திகள்