76 வாக்குச்சாவடி மையங்கள் மறுசீரமைப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் 76 வாக்குச்சாவடி மையங்கள் மறு சீரமைப்பு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.;

Update:2023-10-19 00:15 IST

860 வாக்குச்சாவடிகள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தல் நடத்திட ஏதுவாக 421 இடங்களில் 860 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றில் 160.சீர்காழி சட்டமன்ற தொகுதியில் 150 இடங்களில் 288 வாக்குச்சாவடிகள், 161.மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில் 136 இடங்களில் 266 வாக்குச்சாவடிகள் மற்றும் 162.பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் 135 இடங்களில் 306 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளது.

2024-ம் ஆண்டு நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளையும் கள ஆய்வு செய்து மறுசீரமைப்பு செய்திட ஏதுவாக பழுதான மற்றும் இடிக்கப்பட்ட கட்டிடங்கள், வாக்குச்சாவடியில் உள்ள பகுதிகளை பிரித்தல், வாக்காளர்களின் வசதிக்கேற்ப பிரிவுகளை பிரித்தல் உள்ளிட்ட காரணிகளை அனுசரித்தும், பொதுமக்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் கருத்துகளின் அடிப்படையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் 76 வாக்குச்சாவடி மையங்கள் மறுசீரமைப்பு செய்திட தலைமை தேர்தல் ஆணையர் அவர்களுக்கு முன்மொழிவு அனுப்பப்பட்டது.

மறுசீரமைப்பு

மேற்படி வாக்குச்சாவடி மையத்திற்கான மறுசீரமைப்பு தொடர்பாக அனுப்பி வைக்கப்பட்ட முன்மொழிவுகள் தேர்தல் ஆணையத்தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில் அய்யாரப்பர் தெற்கு தெருவில் உள்ள வாக்குச்சாவடி எண்.184-ல் உள்ள பிரிவுகளை பிரித்து வாக்குச்சாவடி எண்.185, ராஜ் மெட்ரிகுலேசன் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் 211 ஆலங்குடி வாக்குச்சாவடி மையத்தில் உள்ள நாகமங்கலம் வாக்காளர்களை பிரித்து, 210 நாகமங்கலம் வாக்குச்சாவடியில் சேர்க்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி சட்டமன்ற தொகுதியில் 15 வாக்குச்சாவடி மையங்களும், மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில் 34 வாக்குச்சாவடி மையங்களும், பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் 16 வாக்குச்சாவடி மையங்களும் அதே பகுதியில் வேறு கட்டிடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது.

161.மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில் 5 (வாக்குச்சாவடி எண்.1, 2, 207, 208, 209) வாக்குச்சாவடி மையங்களும், பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் 2 (176,177) வாக்குச்சாவடி மையங்களும் தற்போதைய பள்ளியில் தரத்தின் அடிப்படையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேற்காணும் மாற்றம் செய்யப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்கள் பற்றிய விவரங்களை பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் அறியும் வண்ணம் மாவட்ட கலெக்டர் அலுவலகம், வருவாய் கோட்ட அலுவலகம், தாசில்தார் அலுவலகம் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும், மயிலாடுதுறை மாவட்ட இணையதள பக்கத்தின் வாயிலாகவும் தெரிந்து கொள்ளலாம் என்று மாவட்ட கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்