அனுமதியின்றி செயல்பட்ட பன்றி பண்ணை அகற்றம்

கொல்லங்கோடு அருகே அனுமதியின்றி செயல்பட்ட பன்றி பண்ணையை அதிகாரிகள் அகற்றினர்.

Update: 2023-08-05 20:25 GMT

கொல்லங்கோடு, 

கொல்லங்கோடு அருகே அனுமதியின்றி செயல்பட்ட பன்றி பண்ணையை அதிகாரிகள் அகற்றினர்.

பன்றி பண்ணை

கொல்லங்கோடு அருகே நடைக்காவு ஊராட்சிக்கு உட்பட்ட பாத்திமாநகர் பகுதியில் ஒருவர் தனது வீட்டின் முன்பக்கம் அனுமதியின்றி பன்றி பண்ணை அமைத்திருந்தார். அந்த பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த நிலையில் சுகாதாரமற்ற முறையில் பன்றிகளை வளர்த்து வந்ததால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசியதோடு சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டது.

இதனையடுத்து பன்றி பண்ணையை அகற்ற வேண்டும் என அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு ஊராட்சி அமைப்பிற்கும், போலீசாருக்கும் புகார் கொடுத்தனர். இதுதொடர்பாக பல போராட்டங்கள் நடத்தப்பட்டது.

அதிகாரிகள் நடவடிக்கை

இதையடுத்து பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக் குடியிருப்பு பகுதியில் சுகாதாரமற்ற முறையில் செயல்பட்டு வரும் பன்றி பண்ணையை அப்புறப்படுத்தி பன்றிகளை பறிமுதல் செய்ய உத்தரவிட்டார். இதனையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கொல்லங்கோடு போலீசார் உதவியுடன் சம்பவ இடத்திற்கு வந்து பன்றி பண்ணையை அகற்ற முயன்றனர். அப்போது பண்ணை உரிமையாளர் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவரை போலீசார் சமாதானம் செய்தனர்.

தொடர்ந்து அதிகாரிகள் 2 பன்றிகளை பறிமுதல் செய்து பணியாளர்கள் மூலம் கம்புகளில் கட்டி வாகனத்தில் ஏற்றி சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்