கண்காட்சிக்கு அமைத்த பழ அலங்காரங்கள் அகற்றம்

கண்காட்சிக்கு அமைத்த பழ அலங்காரங்கள் அகற்றம்

Update: 2023-06-01 19:15 GMT

குன்னூர்

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நிலவுகிறது. கோடை சீசனை அனுபவிக்க வரும் சுற்றுலா பயணிகளுக்காக கோடை விழா நடத்தப்படுகிறது. கோடை விழாவின் முதல் நிகழ்ச்சியாக கோத்தகிரியில் காய்கறி கண்காட்சியும், நிறைவு நிகழ்ச்சியாக குன்னூரில் பழக்கண்காட்சியும் நடத்தப்படுகிறது.

அதன்படி 63-வது பழக்கண்காட்சி, குன்னூர் சிம்ஸ் பூங்காவில் கடந்த 27, 28 ஆகிய 2 நாட்கள் நடைபெற்றது. இதில் 3 டன் பழங்களால் பல்வேறு அலங்காரங்கள் காட்சிபடுத்தப்பட்டது.இதில் அன்னாசி பழம் மூலம் அமைக்கப்பட்ட அன்னாசி பழ வடிவம், திராட்சை பழத்தால் ஆன அணில் உருவம், மாம்பழத்தால் ஆன பழக்கூடை, ஆரஞ்சு பழத்தால் ஆன பிரமீடு போன்றவை சுற்றுலா பயணிகளை கவர்ந்தன.தற்போது கோடை சீசன் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சிக்காக அமைக்கப்பட்ட 3 டன் பழ அலங்காரங்களை அகற்றும் பணியில் தோட்டக்கலை துறை ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதில் பெரும்பாலான பழங்கள் விதைகளை எடுத்து நாற்றுக்கள் தயார் செய்ய பழ பண்ணைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்