பேய்குளத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
சாத்தான்குளம் அருகே பேய்குளத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.;
தட்டார்மடம்:
சாத்தான்குளம் அருகே பேய்குளத்தில் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடங்கள் தனி நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருவதாகவும், அதை அகற்றி தர வேண்டும் எனவும் மக்கள் நீதிமன்றத்தில் புகார் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் கடந்த மாதத்தில் இருந்து அகற்றுவதற்கு சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. மூன்று முறை நோட்டீஸ் வழங்கப்பட்ட பின்னர் போதிய அவகாசம் கொடுத்தும் அவர்கள் அகற்றாததால் நேற்று பேய்குளம் பஜாரில் ஒரு சில இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. சாத்தான்குளம் தாசில்தார் தங்கையா தலைமையில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை, தீயணைப்பு துறை, காவல் துறை உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.