கே.வி.குப்பத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம் கால அவகாசம் கேட்டு அதிகாரிகளை முற்றுகை

கே.வி.குப்பத்தில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. அப்போது அதிகாரிகளை பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள், முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-09-17 16:25 GMT

கே.வி.குப்பத்தில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. அப்போது அதிகாரிகளை பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள், முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆக்கிரமிப்பு அகற்றம்

கே.வி.குப்பம் பகுதியில் குடியாத்தம் - காட்பாடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான அளவீடு செய்யப்பட்டது. ஆக்கிரமிப்புகளை தாங்களாகவே முன்வந்து அகற்றும்படி நெடுஞ்சாலைத் துறை சார்பில் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது. சந்தைமேடுபகுதியில் வைக்கப்பட்ட அக்னி கலசத்தை  அகற்ற கூறியபோது பா.ம.க. வினர் ஒன்று திரண்டு போலீசார், வருவாய் துறையினரை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

இந்தநிலையில்  ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்றது. அப்போது பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் திரண்டு வந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற அவகாசம் கேட்டு அதிகாரிகளை முற்றுகையிட்டனர். அஇதனால் போலீசார் குவிக்கப்பட்டனர்.

அதிகாரிகளை முற்றுகை

சந்தைமேடு பகுதியில் வன்னியர் சங்கம் சார்பில் வீரவணக்கநாள் கொண்டாடப்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு வைக்கப்பட்ட அக்னி கலசத்தை, வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று பா.ம.க.வினர் அகற்றினர். தொடர்ந்து பொக்லைன் எந்திரம் மூலம் அளவீடுகளின்படி சாலை ஓரம் அமைக்கப்பட்டு இருந்த கூரைகள், இரும்பு படிகள், சிமெண்டு படிக்கட்டுகள் அகற்றப்பட்டன.

வருவாய் கோட்டாட்சியர் வெங்கட்ராமன் தலைமையில் நடந்த இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், துணை போலீஸ் பிரண்டு ராமமூர்த்தி, தாசில்தார் கீதா, துணை தாசில்தார் சங்கர், போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரி உள்ளிட்ட அதிகாரிகள் ஈடுபட்டனர். அதிகாரிகளை பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்