சாத்தூர்
சாத்தூர் ஊராட்சி ஒன்றியம் கத்தாளம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அணைக்கரைப்பட்டி கிராமத்தில் உள்ள தெருக்களில் நடை பாதைகளை ஆக்கிரமித்து வீட்டு வாசற்படி, மாடிப்படி, திண்ணைகள் கட்டப்பட்டிருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த ஆக்கிரமிப்பினை அகற்ற மதுரை ஐகோர்ட்டு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்றது. இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுகி, மண்டல துணை வட்டாட்சியர் ராஜாமணி, வருவாய் ஆய்வாளர் மாதவி, கிராம நிர்வாக அலுவலர் முத்தையா ஆகியோர் மேற்பார்வையில் அணைக்கரைப்பட்டி கிராமத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியின் போது சாத்தூர் இன்ஸ்பெக்டர் செல்லபாண்டியன், இருக்கன்குடி இன்ஸ்பெக்டர் மயிலு, அம்மாபட்டி சப்-இன்ஸ்பெக்டர் சந்தானமாரிமுத்து மற்றும் வெங்கட்ராமானுஜம் முன்னிலையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.