கருப்பாநதி அணையில் செத்து மிதந்த மீன்கள் அகற்றம்
கருப்பாநதி அணையில் செத்து மிதந்த மீன்கள் அகற்றப்பட்டன.
கடையநல்லூர்:
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே கருப்பாநதி அணை உள்ளது. இந்த அணையின் நீர்மட்டம் 72 அடியாகும். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்ததால் அணையின் தண்ணீர் முற்றிலும் வற்றியது. இதனால் அணையில் விடப்பட்ட 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 2 டன் மீன்கள் செத்து மிதந்தது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசியது மட்டுமல்லாமல், அணைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. செத்து மிதக்கும் மீன்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துனர். இதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகளின் உத்தரவுப்படி மீன் பாசி குத்தகை எடுத்த குத்தகைதாரர்கள் நேற்று வீஞ்சி மூலம் அணையில் செத்து மிதந்த அனைத்து மீன்களையும் அப்புறப்படுத்தினர்.