மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி

சீர்காழி பகுதியில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி

Update: 2022-11-30 18:45 GMT

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதிகளில் தொடர் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பில் நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு இந்திய செஞ்சிலுவை சங்க மாவட்ட தலைவர் கனகசபை தலைமை தாங்கினார். செஞ்சிலுவை சங்க சீர்காழி நிர்வாக குழு உறுப்பினர்கள் புகழ், சாமிநாதன், கபிலன், ஷாஜகான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் மணிகிராமம், ராதாநல்லூர், ஆலாலசுந்தரம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட ஏழை-எளிய மக்களுக்கு தார்ப்பாய், சமையல் பாத்திரம் உள்ளிட்ட நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. இதில் செஞ்சிலுவை சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் க.சுவாமிநாதன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்