தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி
கன்னியாகுடி ஊராட்சியில் தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி;அ.தி.மு.க.சார்பில் வழங்கப்பட்டது
திருவெண்காடு:
சீர்காழி அருகே கன்னியாகுடி ஊராட்சி வடக்குத்தெருவில் வசித்து வரும் சுந்தரமூர்த்தி மற்றும் கண்ணதாசன் ஆகியோரது வீடுகள் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் முற்றிலும் எரிந்து சாம்பலானது. இதை அறிந்த மயிலாடுதுறை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பவுன்ராஜ், மாவட்ட அவைத்தலைவர் பாரதி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி தலா ரூ.5 ஆயிரம் மற்றும் அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களை வழங்கினா். அப்போது சீர்காழி மேற்கு ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், வைத்தீஸ்வரன் கோவில் பேரூர் கழக செயலாளர் போகர்ரவி, ஒன்றிய கவுன்சிலர் ஆனந்தி, பார்த்தசாரதி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.