தாமிரபரணி ஆற்றில் உபரி நீர் திறப்பு; மக்கள் கவனமாக இருக்க வேண்டும்: மாவட்ட ஆட்சியர்
திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு அணை முழு கொள்ளளவான 118 அடியை இன்று மாலை 4 மணி அளவில் எட்டும் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.;
நெல்லை,
தாமிரபரணி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என்று நெல்லை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக நெல்லை மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருப்பதாவது:-
திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு அணை முழு கொள்ளளவான 118 அடியை இன்று மாலை 4 மணி அளவில் எட்டும். அதன் பிறகு உபரி நீர் 1,500 முதல் 2,000 கன அடி வரை தாமிரபரணி ஆற்றில் திறக்கப்படும். நேற்று முதல் மழை ஏதுமில்லை. வெள்ள அபாயம் எதுவும் தற்போது இல்லை. ஆயினும் பொதுமக்கள் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது" என்று தெரிவித்துள்ளார்.