வட்டார விளையாட்டு போட்டியில் கோவில்பட்டி நாடார் மேல்நிலை பள்ளிக்கு சாம்பியன் பரிசு

வட்டார விளையாட்டு போட்டியில் கோவில்பட்டி நாடார் மேல்நிலை பள்ளிக்கு சாம்பியன் பரிசு வழங்கப்பட்டது.

Update: 2022-09-21 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி வ.உ.சி. அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் வட்டார அளவிலான விளையாட்டு மற்றும் குழு போட்டிகள் நடைபெற்றது. போட்டியில் கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 14 மற்றும் 17 வயதுக்கு உட்பட்ட ஹேண்ட் பால், மேஜை பந்து

ஒற்றையர், இரட்டையர் போட்டியில் முதலிடமும், மாணவிகள் 14 மற்றும் 17 வயது பெண்கள் மேஜை பந்து ஒற்றையர், இரட்டையர், இறகு பந்து போட்டியில் ஒற்றையர் இரட்டையர் ஆகிய 15 போட்டிகளில் முதலிடம் பெற்றார்கள்.

இதே போல மாணவிகள் 17 மற்றும் 19 வயது மேஜை பந்து ஒற்றையர், இரட்டையர், 19 வயது மாணவர்கள் இறகு பந்து ஒற்றையர், இரட்டையர் போட்டிகளில் முதலிடமும், கபடி போட்டியில் 2-ம் இடமும், தடகளப் போட்டியில் மாணவர்கள் 188 புள்ளிகளும் பெற்றார்கள். தனி நபர் சாம்பியன்ஷிப் போட்டியில் 14 வயது மாணவர் செஸ்வந்த் 100, 200 மீ ஓட்டம், நீளம் தாண்டுதல் போட்டியில் முதலிடம் பெற்றார்.

17 வயது சுகிசிவம் 100, 200 மீ ஓட்டம், மும்முறை தாண்டுதலில் முதலிடம்ஸபெற்றார். 19 வயது பிரிவில் தாமரைச்செல்வன் 800, 1500, 3000 மீ ஓட்டத்தில் முதலிடம் பெற்று சாம்பியன் பரிசை வென்றனர்.

வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளை யும், பயிற்சி அளித்த உடற்கல்வி இயக்குனர் முத்துக்குமார், உடற்கல்வி ஆசிரியர்கள் சசிகுமார், சுந்தர்ராஜ், மகேஸ்வரி ஆகியோரை நாடார் உறவின் முறை சங்கத் தலைவர் ஏ. பி. கே. பழனிச்செல்வம், பள்ளி செயலாளர் ஆர்.எஸ். ரமேஷ், பொருளாளர் சண்முகராஜா, தலைமை ஆசிரியர் ஜான்கணேஷ் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்