சந்தை படுத்துதலுக்கு வட்டாரம் வாரியாக பொருட்கள் தேர்வு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சந்தை படுத்துதலுக்கு வட்டாரம் வாரியாக பொருட்கள் தேர்வு செய்யப்பட்டது.

Update: 2023-09-07 19:08 GMT

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளவாறு, மாவட்டந்தோறும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்திடும் பொருட்களை மதிப்பு கூட்டுதல், சந்தைப்படுத்துதல் மற்றும் அதிக சந்தை செய்து தருதல் போன்றவை மேற்கொள்ள ஒவ்வொரு வட்டாரத்திலும் ஒரு பொருளை கலெக்டர் தேர்வு செய்து 2023-2024-ம் ஆண்டில் மேம்படுத்திடவும், பொதுவான வாய்ப்புகளை ஏற்படுத்துதல் மற்றும் தேவைப்படும் மதிப்பு கூட்டலுக்கான வாய்ப்புகளை ஏறபடுத்துவதற்கான இடவசதிகள், உற்பத்தி செய்திடும் ஒரு பொருளை தேர்வு செய்திடல் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம் லுங்கி, ஆற்காடு இயற்கை தேன், காவேரிப்பாக்கம் பாக்கு மட்டை, நெமிலி புடவை, சோளிங்கர் ஊறுகாய், மசாலா தூள், திமிரி மஞ்சள், வாலாஜா சணல் பை தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்