திருப்பத்தூரில் ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி
திருப்பத்தூரில் அறிவியல் ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி நடந்தது.
திருப்பத்தூர் விஜய்சாந்தி ஜெயின் மெட்ரிக்பள்ளியில் அறிவியல் ஆசிரியர்களுக்கு பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்ட பயிற்சி நடைபெற்றது. மாவட்ட கல்வி அலுவலர் அமுதா முன்னிலை வகித்தார். ஆசிரியர் எம்.சுரேஷ்குமார், வரவேற்றார். திருப்பத்தூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆர்.மதன்குமார் தலைமை தாங்கி, ஆசிரியர்களுக்கான புத்தகாக்க பயிற்சியை தொடங்கி வைத்து பேசினார். சிறப்பு அழைப்பாளராக பள்ளியின் முதல்வர் பாபு மற்றும் குமார் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
ஆசிரியர்களுக்கு தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்து பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி சார்ந்த கருத்துக்கள் மாவட்ட தொழில் முனைவோர் மண்டல ஒருங்கிணைப்பாளர் சிவகுமார், யுனிசெப் நிறுவனம் சார்பாக சித்தார்த் ஆகியோர் ஆசிரியர்களுக்கு புத்தகாக்க பயிற்சி வழங்கினார்கள். பயிற்சியில் 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் எம்.பி.இளவரசி நன்றி கூறினார்.