வாகனங்கள் இறங்கும்போது விபத்துகளை தவிர்க்க கத்திப்பாரா மேம்பாலத்தில் சிவப்பு நிற மின்விளக்குகள்
வாகனங்கள் இறங்கும்போது விபத்துகளை தவிர்க்க கத்திப்பாரா மேம்பாலத்தில் சிவப்பு நிற மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது.
சென்னையை அடுத்த கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையம் நோக்கி செல்லும் சாலைக்கு வாகனங்கள் இறங்கும் பகுதியில் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி அதிக அளவில் விபத்துகள் ஏற்படுகிறது. இந்த பகுதியில் விபத்துகளை தவிர்க்கும் விதமாக சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் மேம்பாலத்தில் இருந்து வாகனங்கள் இறங்கும்போது சாலை நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதாமல் இருக்க சிவப்பு நிற விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது.
மேம்பாலத்தில் இருந்து இறங்கும் பகுதி மிகவும் வளைவான பகுதி என்பதால் தடுப்பு சுவர் சிகப்பு நிற விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் இரவு நேரங்களில் வாகனத்தில் வருபவர்கள் சிவப்பு நிற விளக்கை பார்த்து கவனமாக வாகனத்தை இயக்கி செல்வார்கள். இதனால் விபத்துகளை தவிர்க்க முடியும் என போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.