நகராட்சி சார்பில் மறு சுழற்சி, மறு பயன்பாடு மையங்கள் தொடக்கம்

நகராட்சி சார்பில் மறு சுழற்சி, மறு பயன்பாடு மையங்கள் தொடக்கங்கப்பட்டன.

Update: 2023-05-20 20:17 GMT

சாத்தூர், 

சாத்தூர் நகராட்சி சார்பில் நகரின் 4 பகுதிகளில் மறுசுழற்சி மற்றும் மறு பயன்பாடு மையம் தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு நகர்மன்ற தலைவர் குருசாமி தலைமை தாங்கினார். நகர் மன்ற துணைத் தலைவர் மற்றும் நகராட்சி ஆணையாளர் இளவரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் சாத்தூர் பஸ் நிலையம், மேல காந்தி நகர் சமுதாயக்கூடம், சிவன் கோவில் தெருவில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், நகராட்சி அலுவலகம் ஆகிய 4 இடங்களில் தேவையில்லாதோர் வைத்திடுக, தேவைப்படுவோர் எடுத்திடுக என்பதை மையமாக கொண்டு நகர் பகுதியில் உருவாகும் குப்பையை குறைக்கும் விதமாக மறுசுழற்சி மற்றும் மறு பயன்பாடு மையம் தொடங்கப்பட்டது. பொதுமக்கள் தங்கள் பயன்படுத்திய தங்களுக்கு தேவை இல்லாத பிறர் பயன்படுத்தும் வகையில் நல்ல நிலையில் உள்ள ஆடைகள், சீருடைகள், புத்தகங்கள், பைகள், பேக் போன்ற பொருட்களை இந்த மையத்தில் வைத்தனர். பின்னர் அப்பொருள் தேவைப்படுவோர் மையத்தில் இருந்து எடுத்து பயன்பெற்றனர். இதில் ம.தி.மு.க. நகர செயலாளர் கணேஷ்குமார், நகர் மன்ற உறுப்பினர்கள், சுகாதார ஆய்வாளர்கள் திருப்பதி, சுரேஷ், நகராட்சி பணியாளர்கள், சுய உதவி குழு உறுப்பினர்கள், தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்