வாணியம்பாடி அருகே பாலாற்றில் 3 சாமி சிலைகள் மீ்ட்பு

வாணியம்பாடி அருகே பாலாற்றில் 3 சாமி சிலைகள் மீட்கப்பட்டன.

Update: 2022-06-11 13:13 GMT

வாணியம்பாடி

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த சங்கராபுரம் கிராமம் அருகில் உள்ள பாலாற்றின் ஓரம் கல்லால் ஆன பெருமாள் மற்றும் 2 அம்மன் சாமி சிலைகள் இருப்பதாக கிராம நிர்வாக அலுவலர் வளர்மதிக்கு தகவல் கிடைத்தது. அப்பகுதி மக்கள் 3 சாமி சிலைகளையும் மீட்டு பூஜை செய்தனர்.

வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு சென்று 3 சிலைகளையும் மீட்டு வாணியம்பாடி தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். இது சம்மந்தமாக வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்