சாதனை பதிவிற்கான ஸ்கேட்டிங் நிகழ்ச்சி
சாதனை பதிவிற்கான ஸ்கேட்டிங் நிகழ்ச்சி நடைபெற்றது.;
விருதுநகரில் நோவா உலக சாதனை பதிவிற்காக 8 வயது முதல் 15 வயது வரையிலான 75 மாணவர்கள் ஹெல்மெட் அணிதல் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 8 கிலோமீட்டர் ஸ்கேட்டிங் செய்து சாதனை படைத்தனர். சாதனை நிகழ்வினை விருதுநகர் புதிய பஸ் நிலைய வளாகத்தில் நகரசபை தலைவர் மாதவன் தொடங்கி வைத்து சாதனை படைத்த மாணவர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை நோவா இந்திய இயக்குனர் ஜெயக்குமார் செய்திருந்தார்.