கொல்லம்பாளையம் ரெயில்வே நுழைவு பாலம் ரோடு சீரமைப்பு பணி தொடக்கம்

கொல்லம்பாளையம் ரெயில்வே நுழைவு பாலம் ரோடு சீரமைப்பு பணி தொடங்கப்பட்டுள்ளது.;

Update:2022-06-21 02:36 IST

ஈரோடு:

ஈரோட்டில் இருந்து கரூர், பழனி, தாராபுரம் மற்றும் தென் மாவட்டங்களுக்கு சென்று வர கொல்லம்பாளையம் ரெயில்வே நுழைவு பாலத்தின் கீழ் உள்ள ரோடு மிகவும் முக்கிய ரோடாக உள்ளது. இந்த ரோடு பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாததால் ரோடு குண்டும், குழியுமாக காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர்.

இந்த நிலையில் நுழைவு பால ரோட்டை சீரமைக்க கோரி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்தனர். இதைத்தொடர்ந்து நெடுஞ்சாலை துறையினரால் நுழைவு பாலத்தின் கீழ் உள்ள ரோட்டை சீரமைக்க ரூ.50 லட்சம் ஒதுக்கப்பட்டது.

இந்த பணிக்காக நேற்று முன்தினம் முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று பாலத்தின் கீழ்புற பகுதியில் ஆரம்ப கட்ட பணி தொடங்கியது. பாலத்தின் கீழ்புறம் ரோட்டின் ஒரு பகுதி போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. வாகனங்கள் வரக்கூடாது என்பதற்காக தடுப்புகள் வைக்கப்பட்டு உள்ளன.

பொக்லைன் எந்திரம் மூலம் பாலத்தின் கீழ் பழுதான கான்கிரீட் பகுதிகளை உடைத்து அப்புறப்படுத்தும் பணி நடந்து வருகிறது. ரோட்டின் ஒருபுறம் முழுமையாக கான்கிரீட் அமைக்கப்பட்டு, 20 நாட்களுக்கு பின்னர் மற்றொரு புறம் உள்ள ரோடு கான்கிரீட் போடப்படும் எனவும், முழு பணிகளும் 60 நாட்களுக்குள் முடிக்கப்படும் என்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்