ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

ஏலமன்னா அரசு பள்ளியில் ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது.

Update: 2022-08-31 15:18 GMT

பந்தலூர், 

பந்தலூர் அருகே ஏலமன்னா பகுதியில் அரசு உண்டு உறைவிடப்பள்ளி உள்ளது. இங்கு ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இதற்கிடையே பள்ளிக்கு சொந்தமான நிலத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து, தேயிலை சாகுபடி செய்து உள்ளார். இதுதொடர்பாக ஆக்கிரமிப்பு நிலத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மாவட்ட கலெக்டர் அம்ரித், கூடலூர் ஆர்.டி.ஓ. சரவண கண்ணன் ஆகியோர் உத்தரவின்படி, பந்தலூர் தாசில்தார் நடேசன், சர்வேயர் மனோஜ், வருவாய் ஆய்வாளர் தேவராஜ், கிராம நிர்வாக அலுவலர் கர்ணன் மற்றும் வருவாய்த்துறையினர் அரசு பள்ளிக்கு சொந்தமான நிலத்தை அளவீடு செய்தனர். இதில் 7 சென்ட் நிலத்தை ஆக்கிரமித்து தேயிலை செடிகள் பயிரிடப்பட்டு இருந்தது தெரியவந்தது. உடனே வருவாய்த்துறையினர் தேயிலை செடிகளை அகற்றி, ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்