குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர்களுடன் கோட்டாட்சியர் பேச்சுவார்த்தை

கருணீகர் சான்றிதழ் வழங்காததால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர்களுடன் கோட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினார்.;

Update:2023-02-23 22:14 IST

ஆரணிகருணீகர் சான்றிதழ் வழங்காததால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர்களுடன் கோட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினார்.ஆரணிகருணீகர் சான்றிதழ் வழங்காததால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர்களுடன் கோட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஆரணி பள்ளிக்கூட தெருவில் உள்ள குடுகுடுப்பைக்காரர்கள் 300-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களது குடும்பத்தை சேர்ந்த 90 மாணவர்கள் பள்ளிகளில் படிக்கின்றனர், இவர்களில் 24 பேருக்கு சாதி சான்றிதழ் வழங்கப்படாததால் தொடர்ச்சியாக பள்ளிக்குச் செல்லாமல் இருந்து வந்துள்ளனர்.

இது சம்பந்தமாக மாதாந்திர கல்வி ஆய்வுக் கூட்டத்தில் தெரியவரவே உடனடியாக சம்பந்தப்பட்ட பகுதிக்கு வருவாய் கோட்டாட்சியர் கலைவாணி ஆரணியில் உள்ள வட்டார வளமைய பொறுப்பாளர்களுடன் நேற்று மாலை அவர்களது பகுதிக்கு சென்று ஆய்வுக் கூட்டம் நடத்தினர்.

அப்பொழுது குடுகுடுப்பைக்காரர்கள், கருணீகர் ஜாதி சான்று வழங்காமல் இருப்பதால் எங்கள் குழந்தைகளை தொடர்ச்சியாக பள்ளிக்கு அனுப்ப முடியாது. மற்ற மாவட்டங்களில் எங்களுக்கு கருணீகர் இன சான்று வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் திருவண்ணாமலை மாவட்டத்தில், ஆரணி தாலுகாவில் மட்டும் வழங்கப்படாமல் இருந்து வருவதால் நாங்கள் இந்த எதிர்ப்பை தெரிவித்து வருகிறோம் என்று தெரிவித்தனர்.

அதற்கு கோட்டாட்சியர் உடனடியாக கலெக்டரிடம் பேசி நடவடிக்கை எடுக்கிறோம் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புங்கள் என அதிகாரிகள் வலியுறுத்தினர். இதனையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்