ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம். ஆஸ்பத்திரியில் பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்தன

ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம். ஆஸ்பத்திரியில் பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்தன.

Update: 2022-10-14 04:03 GMT

சென்னை ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம். ஆஸ்பத்திரியில் கடந்த 28-ந் தேதி தண்டையார்பேட்டை இந்திராநகர் பகுதியை சேர்ந்த டிரைவர் குமரேசன் என்பவருடைய மனைவி சுகன்யா (வயது 26) என்ற பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்தன. 2 ஆண் குழந்தைகள், ஒரு பெண் குழந்தை என 3 குழந்தைகளும் 10 மாதம் முழுமையடைவதற்கு முன்னரே அறுவை சிகிச்சை மூலமாக பிறந்துள்ளது.

3 குழந்தைகளும் எடைகுறைவாக பிறந்ததால் ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து சிகிச்சை அளித்து வந்தனர். 15 நாட்களுக்கும் மேலாக அளிக்கப்பட்டு வந்த சிகிச்சையின் பலனாக குழந்தைகள் நல்ல முன்னேற்றம் கண்டதால் நேற்று தாயோடு சேர்ந்து 3 குழந்தைகளும் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அப்போது நல்ல முறையில் தன்னையும், தன் குழந்தைகளையும் கண்காணித்து சிகிச்சை வழங்கிய டாக்டர்களுக்கு தாய் சுகன்யா நன்றி தெரிவித்தார். ஆர்.எஸ்.ஆர்.எம். ஆஸ்பத்திரி தொடங்கி 142 ஆண்டுகள் ஆனதையொட்டி, வீடு திரும்பும் தாய் சுகன்யாவுக்குகு நினைவு பரிசை ராயபுரம் எம்.எல்.ஏ. ஐட்ரீம் மூர்த்தி மற்றும் நிறுவனர் இரா.சர்.ராமசாமி குடும்பத்தினர் வழங்கினர்.

அப்போது ஸ்டான்லி ஆஸ்பத்திரி முதல்வர் பாலாஜி, ஆர்.எஸ்.ஆர்.எம். ஆஸ்பத்திரி நிலைய அதிகாரி ராஜலட்சுமி, பேராசிரியர் சாந்தி உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்