ரேஷன் அரிசி கடத்துபவர்கள்குறித்து தகவல் தெரிவிக்கலாம்அதிகாரி தகவல்

ரேஷன் அரிசி கடத்துபவர்கள் குறித்து தகவல் தெரிவிக்கலாம் என்று அதிகாாி தொிவித்துள்ளாா்.

Update: 2023-08-19 22:05 GMT

ஈரோடு குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழக குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுத்துறை டி.ஜி.பி. வன்னியப்பெருமாள், பொதுவினியோக திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு வழங்கப்படும் ரேஷன் அரிசியை சிலர் பதுக்கி வைத்தும், கடத்தியும் விற்பனை செய்து வருகின்றனர். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஈரோடு மாவட்டத்திலும் தமிழக-கர்நாடக மாநில எல்லையான தாளவாடி, பர்கூர் பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டத்தில் ரேஷன் அாிசி கடத்துபவர்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை பதுக்கி விற்பனை செய்பவர்கள் குறித்து தகவல் தெரிந்தால் பொதுமக்கள் உடனடியாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசாருக்கு தெரிவிக்கலாம். மேலும் கட்டணமில்லா 1800 599 5950 என்ற எண்ணுக்கும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அவர் கூறியிருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்