ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

ரேஷன் அரிசி கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-12-09 19:49 GMT

தென்காசி குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக் குமார் மற்றும் போலீசார் சங்கரன்கோவில் அருகே உள்ள சங்குபட்டி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரில் 1,125 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. உடனே போலீசார் ரேஷன் அரிசி கடத்தியதாக காரில் வந்த ஊமத்தலைவன்பட்டியைச் சேர்ந்த சீனிபாண்டியை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து அரிசியையும், காரையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்