பாப்பிரெட்டிப்பட்டியில் ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்

Update: 2022-09-20 18:45 GMT

பாப்பிரெட்டிப்பட்டி:

தர்மபுரி குடிமை பொருள் வழங்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையிலான போலீசார் பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 1,050 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரிந்தது. இதுகுறித்து வேனை ஓட்டி வந்தவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர் கொண்டகரஅள்ளியை சேர்ந்த ஆறுமுகம் (வயது 56) என்பதும், கர்நாடகாவுக்கு ரேஷன் அரிசியை கடத்தி செல்ல முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆறுமுகத்தை கைது செய்தனர். மேலும் 1,050 கிலோ ரேஷன் அரிசி, சரக்கு வேன் பறிமுதல் செய்யப்பட்டது. 

மேலும் செய்திகள்