ஆட்டு சந்தையில் ரம்ஜான் விற்பனை மந்தம்

கே.வி.குப்பம் ஆட்டு சந்தையில் ரம்ஜான் விற்பனை மந்தமாக இருந்தது.

Update: 2023-04-17 17:38 GMT

கே.வி.குப்பத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை நடைபெறும் ஆட்டு் சந்தை நேற்று நடைபெற்றது. காலை 5 மணிமுதல் விற்பனைக்காக ஆடுகள் கொண்டு வரப்பட்டன. சுமார் 300-க்கும் மேற்பட்ட வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் என பல்வேறு ரக ஆடுகள் விற்பனைக்கு வந்தன. அதில் பெரிய ஆடுகள் சுமார் ரூ.10 ஆயிரம் வரை விலை போனது. வருகிற 22-ந் தேதி ரம்ஜான் நடைபெறுவதை முன்னிட்டு அதிக அளவில் ஆடுகள் விற்பனை நடைபெறும் என்று மிகவும் ஆர்வத்துடன் விவசாயிகள் வந்தனர். ஆனால் ஆடுகளின் விற்பனை மந்தமாகவே இருந்தது. இதனால் விலைபோகாத ஆடுகளை விவசாயிகள் வீட்டுக்கு கொண்டு சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்